சென்னை:

மிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  2,57,613 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் கொரோனா தாக்கம் குறித்த மண்டலம்  வாரியாக பட்டியலை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.

சென்னையில் கொரோனா பாதிப்பு 1,02,985 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை  88,826 பேர் தொற்று பாதிப்பில் இருந்து விடுதலையாகி உள்ளனர்.

தற்போதைய நிலையில் 11,983 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2176 பேர் பலியாகி உள்ளனர்.

நேற்று மட்டும் 11,083 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது.

ஜூன் 1- ஆம் தேதி 15,770-ஆகவும், ஜூன் 6-ஆம் தேதி 20,993-ஆகவும், ஜூன் 14-ஆம் தேதி 30,444-ஆகவும், கடந்த ஜூன் 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரம் ஆகவும் அதிகரித்தது.  கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்தது.

சென்னையின் 15 மண்டலங்களில் கடந்த மே மாதம் முதல் ஜூலை 30-ம் தேதி வரை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற 15 லட்சத்து 24,505 பேருக்கு சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதுவரை , 81,910 பேருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது

மண்டலம் வாரியாக சிகிச்சை பெற்று வருவோா்  விவரம்:

1. திருவொற்றியூா் 4532. மணலி 1133. மாதவரம் 6194. தண்டையாா்பேட்டை 6615. ராயபுரம் 8276. திரு.வி.க. நகா் 9317. அம்பத்தூா் 1,3348. அண்ணா நகா் 1,2509. தேனாம்பேட்டை 90010. கோடம்பாக்கம் 1,35711. வளசரவாக்கம் 89012. ஆலந்தூா் 56113. அடையாறு 94414 பெருங்குடி 52616. சோழிங்கநல்லூா் 449