டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது 19,509 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 3205 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,88,118 ஆக உயர்ந்தது.
நேற்று மேலும் 31 பேர் கொரோ தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,23,920 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது.
கடந்த 24மணி நேரத்தில், கொரோனா பாதிப்பில் இருந்து 2,802 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,25,44,689 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.74% ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 19,509 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.05% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 4,79,208 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,89,48,01,203 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]