ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.49 கோடியைக் கடந்துள்ளது.
ஓராண்டுக்கும் மேலாக உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் இன்னும் முற்றிலுமாக அகலவில்லை. இன்றளவும் தொற்று பாதிப்பு இருந்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் தொற்று பாதிப்பு 10,49,01,704 ஆக உயர்ந்துள்ளது.. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7,66,29,434 பேர் குணமடைந்துள்ளனர்.
தொற்று பாதிப்பு காரணமாக, உலகம் முழுவதும் இதுவரை 22 லட்சத்து 78ஆயிரத்து 440 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நிலையில், கொரோனா தொற்றுக்கு தற்போது 2,58,46,528 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,06,641 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருநாள் அதிகபட்ச அளவாக 31,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இந்த சூழலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் 8 ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.