சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1568பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக மேலும் 1,568 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,19,511 பேர் ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 19 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,980 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மேலும், 1,657 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 25,68,161 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 6,370 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1,60,742 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,27,93,906 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.