ஜெனிவா: உலகளவில் கொரோனாவால் பாதிப்பு 18.38 கோடி ஆகவும் உயிரிழப்பு 39.79 லட்சமாகவும் உயர்ந்துள்ளது.
2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு உலகம் முழுவதும் நாடுகளில் பரவிய நிலையில், தற்போது உருமாறிய நிலையில் 2வது அலை, 3வது அலை என தொடர்நிது வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், உலக நாடுகளில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இந்த நிலையில் உலகளவில் கொரோனா பாதிப்பு 183,849,133 ஆக உயர்ந்துள்ளது. அது போல் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 168,276,644 ஆக உள்ளது. கொரோனாவால் இது வரை உலகளவில் 3,979,872 பேர் இறந்துள்ளனர்.
கொரோனாவால் அமெரிக்காவில் 34,579,401 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 6.20 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 29,072,117 ஆகும்.
இந்தியாவில் 30,501,189 பேர் கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 401,068 பேர் பலியாகிவிட்டனர். இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 29,597,738 ஆகும். பிரேசிலில் 1.86 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை பிரேசிலில் 5.22 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர்.
பிரான்ஸில் 57 லட்சம் பேரும், துருக்கியில் 55 லட்சம் பேரும் ரஷ்யாவில் 55 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 17 ஆயிரம் பேரும் இந்தியாவில் 47 ஆயிரம் பேரும் பிரேசிலில் 65 ஆயிரம் பேரும் பிரான்ஸில் 2 ஆயிரம் பேரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.