டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 7,946 பேருக்கு கொரோனா பாதிப்பு, 9,828 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 2.98 சதவிகிதமாக உள்ளது.
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்றம் இறக்கமாக காணப்படுகிறது. கடந்த வாரம் 10ஆயிரத்துக்கும் கீழே குறைந்த பாதிப்பு தற்போது தினசரி பாதிப்பு 5 ஆயிரம் முதல் 10ஆயிரம் வரையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டு உள்ளது.
கடந்த 24மணி நேரத்தில், புதிதாக மேலும், 7 ஆயிரத்து ,946 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நேற்று 7 ஆயிரத்து 231ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 7 ஆயிரத்து 946 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,44,28,393 லிருந்து 4,44,36,339 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 64,667 லிருந்து 62,748 ஆக குறைந்துள்ளது.
நேற்று மட்டும் 9,828 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,38,35,852 லிருந்து 4,38,45,680 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக 37 பேர் பலியாகினர். இதுவரை 5,27,911 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 18,92,969 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 212 கோடியே 52 லட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.