சென்னை: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம் வெளியாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1083 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 5928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,33,969 ஆகி அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் தமிழகம் முழுவதும் 6,031 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 3,74,172 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டங்களை பொறுத்தவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 340 பேரும், சென்னையில் 1084 பேரும், கோவை மாவட்டத்தில் 581 பேரும் , ஒரே நாளில் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் .
இன்று ஒரே நாளில் 96 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 22 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம்,7418 ஆக உயர்ந்துள்ளது.
வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,341 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது/
வெளிநாடுகளில் இருந்து வந்த 919 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 843 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 4,579 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ரயில், விமானம், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 7,61,177 -ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:
சென்னையில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 697பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 16,075 பேருக்கும், திண்டுக்கல்லில் 6,669 பேருக்கும், திருநெல்வேலியில் 9,688 பேருக்கும், ஈரோட்டில் 3,274, திருச்சியில் 7,575 பேருக்கும், நாமக்கல் 2,220 மற்றும் ராணிப்பேட்டை 10,702, செங்கல்பட்டு 26,509, மதுரை 14,279, கரூர் 1,618, தேனி 12,731 மற்றும் திருவள்ளூரில் 25,051 பேருக்கு, தூத்துக்குடியில் 11,475, விழுப்புரத்தில் 7,595 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 2,187 பேருக்கும், திருவண்ணாமலையில் 10,613, தருமபுரியில் 1,254 பேருக்கும, திருப்பூரில் 2,812, கடலூர் 11,737, மற்றும் சேலத்தில் 11,412, திருவாரூரில் 3,686, நாகப்பட்டினம் 2,774, திருப்பத்தூர் 2,910, கன்னியாகுமரியில் 9,710 மற்றும் காஞ்சிபுரத்தில் 17,526 பேருக்கும், சிவகங்கை 4,089 மற்றும் வேலூரில் 10,919 பேருக்கும், நீலகிரியில் 1,653 பேருக்கும், தென்காசி 5,465, கள்ளக்குறிச்சியில் 6,288 பேருக்கும், தஞ்சையில் 6,737, விருதுநகரில் 12,779, ராமநாதபுரத்தில் 4,758 பேருக்கும், அரியலூர் 2,819 மற்றும் பெரம்பலூரில் 1,336 பேருக்கும், புதுக்கோட்டையில் 6,167 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 2,190 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.