பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆஸ்திரிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான KTM நிறுவனத்தை ₹7,765 கோடி ஒப்பந்தத்தில் கையகப்படுத்த உள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முழு உரிமையாளரான பஜாஜ் ஆட்டோ இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் BV (BAIHBV) மூலம் KTM AG நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

இது தவிர, KTM பைக்குகளுக்கான சேசிஸ் மற்றும் சஸ்பென்ஷன்களை தயாரிக்கும் உலகின் முதன்மையான இரு சக்கர வாகன சஸ்பென்ஷன் உற்பத்தியாளர்களில் ஒருவரான WP சஸ்பென்ஷன் நிறுவனத்தையும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வாங்கவுள்ளது.
இந்த முயற்சி பிரீமியம் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட்டார் பைக் பிரிவில் பஜாஜ் நிறுவனத்தின் நிலையை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஆஸ்திரிய ஒழுங்குமுறை மற்றும் இந்திய ஒழுங்குமுறை அமைப்பான செபி விதிமுறைகளுக்கு இணங்க இணைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.