கங்கனா ரணாவத் நடிக்கும் புதிய இந்திப்படமான ‘DHAAKAD’’ பெரும் பட்ஜெட்டில் உருவாகிறது.
நஸ்ரிஷ் கை இயக்கும் இந்த படத்துக்கு பிரஞ்சு ஒளிப்பதிவாளர் டிஸ்டா நகாதா, ஒளிப்பதிவு செய்கிறார்.
நிலக்கரி சுரங்கத்தில் நடப்பது போல், இந்தப்படத்தில் ஒரு சண்டைக்காட்சி இடம் பெறுகிறது.

25 கோடி ரூபாய் செலவில் இதற்கான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாக. நடிகை கங்கனா ரணாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த சண்டை காட்சியின் ஒத்திகையையும் அவர் வெளியிட்டுள்ளார். “இது உலகத்தரத்தில் உருவாகும் திரில்லர் சினிமா” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள் கடத்தல் மற்றும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை மையமாக கொண்டு இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
– பா. பாரதி
[youtube-feed feed=1]