சென்னையைச் சேர்ந்த சுதர்சன் எண்டர்பிரைசஸ் நிறுவனம், திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்கு ₹2.4 கோடி மதிப்புள்ள 2.5 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரியிடம், கோயிலின் ரங்கநாயக்குலா மண்டபத்தில், நிறுவன பிரதிநிதிகள் சங்கு மற்றும் சக்கரத்தை ஒப்படைத்ததாக TTD வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகவும் பணக்கார கோயிலாக திகழும் திருப்பதி பாலாஜி கோயிலை 1933ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.