n k

சென்னை:’

‘தமிழகத்தில், மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமே இல்லை,” என்று, சட்டசபையில் நேற்று, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உறுதிபட தெரிவித்தார். இந்த சட்டமன்றக்கூடத்தொடரிலாவது மதுவிலக்கு குறித்து முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது.

கடந்த பல வருடங்களாகவே பா.ம.க, மதுவிலக்கு கோரி பலவித போராட்டங்களை நடத்தி வருகிறது. பிறகு, ம.தி.மு.க.வும் மதுவுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டது. அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, மதுவிலக்கையும் முன்வைத்து நடைபயணம் மேற்கொண்டார்.

சட்ட பஞ்சாயத்து இயக்கமும் தொடர்ந்து மதுவிலக்கு கோரி பலவித போராட்டங்களை நடத்தி வருகிறது. தற்போதும் தொடர் உண்ணாவிரதத்தை நடத்திவருகிறது.

காந்தியவாதி சசபெருமாள், அதற்கான போராட்டத்தின் போதே உயிரிழந்ததை அடுத்து, மதுவுக்கு எதிரான உணர்வு மக்களிடையே பெருகியது. தன்னெழுச்சியாக பல இடங்களில் மதுவிலக்கு கோரி போராட்டங்கள் நடைபெற்றன. .

திருச்சியில், நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த சிலர், மதுக்கடையை அடித்து உடைத்தனர். கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ், தமாகா உட்பட பல கட்சிகளும் மதுவுக்கு எதிராக குரல் எழுப்பின. போராட்டங்களை அறிவித்தன.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும், “ஆகஸ்ட் 15 முதல் மதுக்கடைகளின் நேரத்தை மட்டும் குறைத்து மக்களின் உணர்வை திசை திருப்ப தமிழக அரசு முயல்கிறது” என்றார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “ஆகஸ்ட் 15 அன்று மதுவிலக்கு கொள்கையை தமிழக அரசு அறிவிக்காவி்ட்டால் தமிழகத்தில் உள்ள அத்தனை கடைகளையும் அடித்து உடைப்பேன்” என்று ungalpatrikai.com இதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார். றார். (பிறது அப்படி தான் சொல்லவில்லை என்று மறுத்தது வேறு விசயம்.) மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை என்று சொல்லி வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் கோரினார்.

இதையடுத்து, கடந்த சுதந்திர தினம் முதல் தமிழகத்தில் மதுவிலக்கு அறிவிக்கப்படும் என்று ஊடகங்கள் சில யூகங்களை வெளியிட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

ஆனால் ஆகஸ்ட் 15 அன்று முதல்வர் ஜெயலலிதா, மதுவிலக்கு குறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

பிறகு சில பத்திரிகைகள், “மதுவிலக்கு கோரி பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தும் நிலையில், அது குறித்த அறிவிப்பை வெளியிட்டால் அக்கட்சிகள் பெயர் வாங்கிவிடும் என்று ஜெயலலிதா நினைக்கிறார். அதனால் சிறிது நாள் கழித்து மதுவிலக்கு குறித்த அறிவிப்பை வெளியிடுவார். குறிப்பாக, வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் மதுவிலக்கு குறித்து அறிவிப்பு வரும்” என்று எதிர்பார்ப்ை தொடர்ந்து ஏற்படுத்தின.

ஆனால் சட்டசபை துவங்கிய நாளில் இருந்து மதுவிலக்கு குறித்து முதல்வர் ஜெயலிலதா எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

nnந்த நிலையில், நேற்று சட்டபையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ”தமிழகத்தில், மதுவிலக்கு கொள்கையில் மாற்றம் இல்லை; மதுவிலக்கை அமல்படுத்துவது என்பது சாத்தியமில்லை,” என்று உறுதிபட தெரிவித்தார்.

மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிய எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளித்து அவர் பேசிதில் இருந்து, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு மதுவிலக்கை அமல்படுத்தப்போவதில்லை என்பது உறுதிபட தெரிகிறது.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதில் இருந்து……

மது இல்லேன்னாத்தான் தீங்கு!

@ மது தீமையானது தான். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமில்லை.மதுவிலக்கை அமல்படுத்தினால், ரவுடியிசம் வளரும்; தவறு செய்வோர் அதிகரிப்பார்கள். கள்ளச் சாராய சாவும் அதிகரிக்கும.. அரசு கஜானா காலியாகும் இப்படி மிகப்பெரிய தீங்குகள் ஏற்படும்.

            திருவள்ளுவர் சொல்லியே கேக்கலியே..

@ திருவள்ளூவர் மது அருந்துவதை கண்டித்திருப்பதில் இருந்து, . தமிழகத்தில், 2,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, மது அருந்துவோரும், மது அருந்துவோரை கண்டிப்போரும் இருந்தனர் என்பது தெரியவருகிறது. அந்த பழக்கம் , இன்றும் தொடர்கிறது.

பழங்காலத்தில், மது குடித்த மன்னரை பாராட்டி, பெண் புலவர் பாடலே பாடியிருக்கிறார்.

              யாராலும் முடியல..

@ இஸ்லாம், மதுவிற்கு எதிரானது. ஆனால், இஸ்லாமிய நாடுகள் சிலவற்றிலும், மதுவிலக்கு அமல்படுத்தப்படவில்லை.

@ முழு மதுவிலக்கை அமல்படுத்திய நாடுகளாலும், அதை முழுமையாக அமல் முடியவில்லை.

      நீங்க ஒழுங்கா..

@ இப்போது மார்க்சிஸ்ட் கட்சியினர் தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டும் என்கிறார்கள். ஆனால் அவர்களது கட்சி, மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் ஆட்சியில் இருந்த போது, மதுவிலக்கை அமல்படுத்தவில்லை. இவர்கள் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு உள்ள மாநிலங்களிலும் முழு மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்துவதில்லை. ஆட்சிக்கு வர வாய்ப்பில்லாத மாநிலங்களில் மட்டும் வலியுறுத்தி பேசுகிறார்கள்.

                             வருமானம் அதிகம்.. பட், குடிக்கிறது கம்மிதான்…

@  தமிழக அரசின், ‘டாஸ்மாக்’ நிறுவனத்திற்கு, 6,800 மதுபானக் கடைகள் உள்ளன. , ஆயத்தீர்வை மற்றும் விற்பனை வரி மூலம், 2011 – 12ல், கடந்த 2014 – 15ம் நிதியாண்டில், 24 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து, ஆண்டுதோறும் மது விற்பனை அதிகரித்து வருவதால், நான்கு ஆண்டுகளில், 6,000 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது.

ஆனால், தமிழக மக்கள் அதிகம் குடிக்கவில்லை. தமிழகத்தில் தனி நபர்கள் மது குடிக்கும் அளவு குறைவாகவே இருக்கிறது. புதுச்சேரியில் தனி நபர் ஒருவர் வாரத்திற்கு, 144 மில்லி மது அருந்துவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இதுவே கோவாவில், 108; ஆந்திராவில், 104; கேரளா மற்றும் கர்நாடகாவில், 102 மி.லி.,யாக உள்ளது. தமிழகத்தில், 85 மி.லி.,யாக இருக்கிறது. தமிழகம், எதில் முதலிடத்தில் இருக்க வேண்டுமோ அதில் முதலிடத்திலும், எதில் கடைசி இடத்தில் இருக்க வேண்டுமோ அதில் கடைசி இடத்திலும் இருக்கிறது.

                                                                                     அவங்கள நிறுத்தச் சொல்லு.

@ நாங்கள் மதுவை ஆதரிக்கவில்லை. மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், நாடு முழுவதும், மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால், தமிழகத்திலும் அமலாகும். குறைந்தது பக்கத்து மாநிலங்களாவது ஒத்துழைக்க வேண்டும்.

                                                                                    பிரச்சாரம் பண்ணலாம் வாங்க..

@ மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள ஒதுக்கப்படும் நிதி, ஒரு கோடி ரூபாயில் இருந்து, மூன்று கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்

@ மதுவை ஒழிக்க, விழிப்புணர்வு பிரசாரம் செய்ய, அனைத்துகட்சியினரையும் அழைக்கிறேன்; அனைவரும் சேர்ந்து, விழிப்புணர்வு பிரசாரம் செய்வோம். சட்டத்தின் மூலம் இதை செய்ய முடியாது; விழிப்புணர்வு மூலம் செய்வோம்.

  • இவ்வாறு தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். அமைச்சரின் பேச்சு மூலம் ஒரு விசயம் தெளிவாகிகிறது..

எதிர்க்கட்சிகளோ வேறு அமைப்புகளோ எவ்வளவு போராடினாலும், மதுவிலக்கை அமல்படுத்துவதில்லை என்பதில் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு பிடிவாதமாய் இருப்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.

மதுவை ஒழிக்க நினைப்பவர்கள், அமைச்சர் சொல்வது போல அவருடன் சேர்ந்து பிரச்சாரத்தில் இறங்கவேண்டியதுதான்!