சிங்கம் படம் பெரும் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, இரண்டாம் பாகமும் ஓகே ஆகிவிட்டது. “அடுத்து சிங்கம் 3 வரப்போகிறது!” என்று கோவை விழா ஒன்றில் அறிவித்தார் சூர்யா.
மூன்று பாகம் எடுக்கப்படும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இந்த “சி – 3”க்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு, தயார் செய்துவிட்டார் ஹரி.
டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கப்போகிறதாம். அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்
முதல் 2 பாகங்களிலும் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த அனுஷ்கா செட்டியே இந்தப் படத்திலும் ஜோடியாக தொடர்கிறார். ஸ்ருதி ஹாசன் இன்னொரு நாயகியாக நடிக்கிறார்.
படத்தின் பெரும்பகுதியை வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஹாலிவுட் போலிசா நடிக்க போறாரு சூர்யா!