
திருப்பூர், யூனியன் மில் சாலையில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் கடந்த 1-ம் தேதி நடைபெற்றது. இதில், தேர்தல் அறிக்கை குறித்து பிரேம லதா பேசினார். அந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் குறித்து அவதூறாகவும், மக்களிடம் விரோதத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பிரச்சினைக்குரிய வகையிலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தூண்டுதலின் பேரில், பிரேமலதா விஜயகாந்த் பேசியதாகக் கூறி திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருப்பூர் வடக்கு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரின்பேரில் வைகோ, பிரேமலதா ஆகியோர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel