
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங் கிணைப்பாளருமான வைகோ தாயகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, தேமுதிக கட்சியை உடைப்பதற்கு திமுகவின் தூண்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை விமர்சித்தார். அச்சமயம் திமுக தலைவர் கலைஞர் மற்றும் தேமுதிக எம்எல்ஏக்கள் தொடர்பாக அரசியலுக்கு அப்பாற்பட்டும், சாதீய தொழில் குறித்தும் தெரிவித்த கருத்துக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்புடையதல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்று மார்க்சிஸ்ட் மாநிலச்செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel