கந்தன்சாவடி பகுதியில் மழைநீர் தேக்கம்
கந்தன்சாவடி பகுதியில் மழைநீர் தேக்கம்

வெள்ள சேதத்துக்கு முக்கிய காரணம் ஆக்கிரமிப்புகள்தான். ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் மட்டுமல்ல.. பரந்த நிலம்கூட, வெள்ள சேதம் ஏற்படாமல் தடுக்கும். வெட்ட வெளியில் தண்ணீர் பாய்வதால் யாருக்கும் நட்டமில்லையே.. ஆனால் அப்படி பரந்த  அரசு இடத்தையும் விட்டுவைப்பதில்லை ஆக்கிரமிப்பாளர்கள்.

இதற்கு ஒரு  உதாரணம், சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஈஞ்சம்பாக்கம். இங்கு  கால்நடை பராமரிப்புத் துறைக்குச் சொந்தமான சுமார் 55 ஏக்கர் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து நாம் சந்தித்த மாநகராட்சி அலுவலர்  கூறியது இதுதான்:

“அதாவது ஆயிரம் கிரவுண்ட் இடம் அது.  கால்நடைகளின் மேய்ச்சலுக்கான இடம்.  காலப்போக்கில்  கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்ததால், அந்த இடத்தில் சிலர் வீடு கட்ட ஆரம்பித்தார்கள். தொடர்ந்து பலரும் கட்ட.. இப்போது தனி ஊராக  ஆகிவிட்டது அந்த ஆக்கிரமிப்பு நிலம்.

ஈஞ்சம்பாக்கத்தில் தற்போது, ‘பெத்தெல் நகர்’ என அழைக்கப்படும் பகுதியில், அந்த நிலம் உள்ளது; சென்னை மாநகராட்சியின், 14வது மண்டலத்தில், 196வது வார்டில் இந்த பகுதி வருகிறது.  சோழிங்கநல்லுார் வருவாய் வட்டத்தில் உள்ள அந்த இடத்தை, அரசியல் ஆசாமிகள்  உள்ளிட்ட பலர் சட்டத்துக்குப் புறம்பாக  ஆக்கிரமித்து இருக்கிறார்கள்.

தாமதமாக விழித்துக்கொண்ட, கால்நடை பராமரிப்புத் துறை, , சோழிங்கநல்லுார் தாசில்தார் மற்றும் காஞ்சிபுரம் கலெக்டருக்கு கடிதம் எழுதியது.  ஆனால் இன்றுவரை நடவடிக்கை இல்லை.

சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளோ.. “அந்த இடம் குறித்து நீதிமன்றத்ிதல் சிலர் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். அதனால்தான் நடவடிக்கை எடுக்கவில்லை” என்கிறார்கள்.

ஆனால், ஒருசிலர்தான் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். அதை காரணம் காட்டி மற்ற இடத்தையும் மீட்காமல் இருக்கிறார்கள் அதிகாரிகள்.

இந்த ஆயிரம் கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு இன்று ஆயிரம் கோடி ரூபாய்!

(அடுத்து.. கல்லூரிகளின் ஆக்கிரமிப்புகள்..)