காங்கிரஸ் கட்சியும் வெள்ள நிவாரண பணிகளில் களம் இறங்கியிருக்கிறது.
வாழப்பாடி யில் இருந்து, வாழப்பாடி நகர காங்கிரஸ் தலைவர் பூக்கடை ரவிமணி தலைமையில் கடலூர் மாவட்ட மக்களுக்கு உதவிப்பொருட்கள் வாகனங்களில் சென்றன.
இந்த பொருட்கள் கடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன. வாழப்பாடி நகர லயன்ஸ் கிளப்புடன் இணைந்து இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும் வாழப்பாடி மக்கள் சார்பிலும் உதவிகள் வழங்கப்பட்டன.