இன்றைய தலைப்புச் செய்தி…..
பத்திரிகைகள்….
தொலைக்காட்சி….
டீக்கடை….
பேருந்து நிலையம்….
ரெயில்நிலையம்….
அலுவலகம்….
மக்கள் கூடும்
இடங்களில் எல்லாம்…
இதே பேச்சு…!!
“வெங்காயம் விலைய பாத்தீங்களா…?
பெட்ரோல் விலைய விட
கம்மியாமே..?!”
“இனிமே…வெங்காயம் வாங்கினா…
பீரோவுல தான் போட்டு வைக்கனும்…!!”
எதிர்கட்சிகள்
மக்கள் மன்றத்தில் பேசும் பேச்சும்
இதுதான்….!
அரசாங்கத்தையே….
அலரவைக்கும்
வெங்காயம்….!
இத்தனை நாட்களாய்
சமையலரைகளில்
கணவர்களை மட்டுமே….
(பெரும்பாலான வீடுகளில் அப்படித்தான்…
உங்கள் வீட்டில் எப்படி..?!)
தினம்தோறும்
கண்ணீர் விட வைத்த…
வெங்காயம்……!
இன்று ஒரு அரசாங்கத்தையும்…
ஆட்சியாளர்களையும்
கண்ணீர் விட வைக்கிறதே…???
நாம் அன்றாடம் உபயோகிக்கும்
உணவுக்கான…உபபொருளான
வெங்காயத்தின் விலையையே….
கட்டுப்படுத்த முடியவில்லை…!!
இது இயற்கையாய் உருவானதா..?
செயற்கையாய் உருவாக்கப்படுகிறதா..?
கண்டறிய வேண்டியது….
கட்டுப்படுத்த வேண்டியது…
அரசின் கடமை…!!
வல்லரசாவது இருக்கட்டும்….
முதலில் மக்களுக்கு நல்லரசாக
இருக்க வேண்டாமா..?!
கொஞ்ச நாளைக்கு….
வெங்காயம் உபயோகிக்காம….
இருந்துதான் பார்ப்போமே….?!
“என்னங்க…!
பெரிய வெங்காயம் விலை ஜாஸ்தியாம்…
டீவி பார்த்துக்கிட்டே.கொஞ்சம்
சின்ன வெங்காயத்தை….
உரிச்சு குடுங்களேன்…?! ”
இல்லத்தரசிகள் குரல் வீடு தோறும்
கேட்கிறது….?!
அட…போங்கப்பா…..!!!
-அ.முத்துக்குமார்