Water from Mullaperiyaru dam opened today for agricultural irrigation

சென்னை:
விவசாய பாசனத்திற்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது.

முல்லை பெரியாறு அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நாளை முதல் 300 கன அடி வீதம் தண்ணீர் திறக்க தமிழக அரசு கூறியுள்ளது. தேனி கம்பம் பள்ளத்தாக்கு இருபோக பகுதியின் முதல் போகத்திற்கு 200 கனஅடி, குடிநீர் தேவைக்காக 100 கனஅடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் நீர் திறப்பின் மூலம் உத்தமபாளையம், தேனி மற்றும் போடிநாயக்கனூர் வட்டங்களில் உள்ள சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்றும் தெரிகிறது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். கோடை காலத்திலேயே பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட உள்ளதால் விவசாயம் செழிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.