jaya_2812684f
கெயில் குழாய் பதிப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன அதை அனுமதிக்க மாட்டேன் என்று பேசினார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் அவர் பிரச்சாரம் செய்ய வருவதை ஒட்டி ஹெலிபேட் அமைக்க, விவசாய நிலங்கள் நாசப்படுத்தப்பட்டுள்ளன.
அ.தி.மு.கவை ஆதரித்து தருமபுரியில் பேசிய முதல்வர் ஜெயலலிதா “விவசாயிகள் நலனை பாதிக்கும் கெயில் திட்டம் கூடாது என தமிழக அரசு அதற்கு தடை விதித்தது. ஆனால், கெயில் நிறுவனம் நீதிமன்றத்தை அணுகி அத்திட்டத்துக்கு அனுமதி பெற்றுள்ளது.
விளை நிலங்களில் எரிவாயு குழாய்களை பதிக்கும் கெயில் நிறுவனத்தின் திட்டத்தை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.
ஆனால், விருத்தாசலத்தில் ஜெயலலிதாவின் பிரச்சார வருகைக்காக ஹெலிபேட் அமைக்கப்பட்டது. அதற்காக விளை நிலத்தை ஹெலிபேட் ஆக்கி, அதில் சிமெண்ட் பூசப்பட்டது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள், “கடந்த ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளை பற்றி கொஞ்சமும் கவலைப்படாத முதல்வர் ஜெயலலிதா இப்போது விளை நிலத்தில் தார் சாலை அமைக்கவும் செய்திருக்கிறார்.  எங்கள் விளை நிலத்தில் செருப்பு அணிந்துகூட நாங்கள் செல்வதில்லை.  ஆனால், விவசாயிகளை மிரட்டி தார் சாலை அமைத்துள்ளனர் ஆளுங்கட்சியினர்” என்று குமுறுகிறார்கள்.
தேர்தலில் கொடுக்கும் வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்ததும் மீறுவது அரசியல்வாதிகளின் இயல்பு. ஆனால் தேர்தலுக்கு முன்பு பேசியதை, அப்போதே மீறியிருக்கிறார் ஜெயலலிதா.