
கடன் பிரச்சினையால் விவசாயிகளின் தற்கொலை செய்துகொள்வதை தடுக்கும் முயற்சியில் நடிகர் விஷால் இறங்கியிருக்கிறார். நிஜமாகவே கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு பண உதவி செய்யப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் தஞ்சை மாவட்டத்தில் விவசாயி பாலன் என்பவர் வங்கிக் கடன் மூலம் வாங்கிய டிராக்டருக்கான தவணையை அடைக்காததால் பிரச்சினை ஏற்பட்டது. வங்கி புகார் காரணமாக, போலீசார் பாலனை விசாரிக்க சென்றனர். அப்போது போலீசார் பாலனை தாக்கினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் விவசாயி பாலனுக்கு நடிகர் விஷால் உதவி செய்வதாக கூறிய விசால், அவரது கடனை தானே அடைப்பதாக அறிவித்தார். அடுத்த சில தினங்களிலேயே கடன் பிரச்சினையால் விவசாயி அழகர் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது, “ ‘மற்றொரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். நண்பர்களே இதற்கு முடிவு கட்ட வேண்டும். இதற்காக தனியாக ஒரு வங்கிக் கணக்கு தொடங்கவிருக்கிறேன்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விஷால் அறிவித்தார்.
இது குறித்து பேசிய விசால், “துபாயில் இருந்து நண்பர் ஒருவர் ஒரு.லட்ச ரூபாய் அனுப்பியிருக்கிறார். டெல்டா விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து விசாரிக்க சொல்லியிருக்கிறேன். அவற்றை முழுமையாக அறிந்து உதவ இருக்கிறேன்” என்றவர், “தற்போது நிறைய பேர் உதவி கேட்டு வருகிறார்கள். முழுமையாக விசாரித்து உண்மையிலேயே வறுமையில் வாடும் விவசாயிகளை அறிந்து உதவி செய்கிறேன்” என்றார்.
Patrikai.com official YouTube Channel