ModiYoga
டில்லி:

பாஜக உறுப்பினர்களை அடக்கி வையுங்கள் அல்லது நம்பகத்தன்மையை இழந்துவிடுவீர்கள் என்று சர்வதேச பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் பிரதமர் நரேந்திர மோடிக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

மூடிஸ் அனலைடிக்ஸ் நிறுவனம்  கூறியுள்ளதாவது:

“முக்கிய சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கு கூட ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடையாது. . எதிர்க்கட்சிகள் பாஜக அரசை கடுமையாக எதிர்த்து வருகின்றன. பாஜக உறுப்பினர்களின் கருத்துகளை மோடி கண்டு கொள்வது இல்லை.

நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல தாக்குதல்கள் நடந்து வருகின்றன.  வன்முறை அதிகரித்து வருவதால் ராஜ்யசபாவில் ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு அதிகரிக்கத் தான் செய்யும். பிரதமர் மோடி பாஜக உறுப்பினர்களை அடக்கி வைக்க வேண்டும். இல்லை என்றால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும்  நம்பகத்தன்மையை இழந்துவிடுவார்.

பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் மோடியின் தலைமைத்துவத்திற்கு முக்கியமானதாக உள்ளது. பீகாரில் பாஜக வெற்றி பெற்றால் ராஜ்யசபாவில் பெரும்பான்மை கிடைக்கும். பீகார் தேர்தல் வெற்றியை பொறுத்து பல விஷயங்கள்  நடக்கும் என்று மூடிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.