Article_1244005764_1

தம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. உடலானது அத்தகைய அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உடம்பினுள் வாங்கும் திறன் கொண்டது. அந்த வகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.
மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது; நெற்றியில் வெப்பம் அதிகமாக உள் வாங்கப்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான வேலையை திருநீறு செய்கிறது, ஆகையால், திருநீறை முதலில் நெற்றியில் அணிகின்றனர். பிறகு, மனிதர்கள் தங்கள் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றார்கள்.
இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள், அது தங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள கையாளும் ஒரு முறை!
திருநீறு செய்யும் முறை:
அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைத்து, பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.
-முகநூல் பதிவு