அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகிய முன்னணி நடிகைகள் நடித்து வரும் இந்த இந்த படத்தின் பாடல் கட்சிக்காக கோவா செல்ல இருகிறார்கள், அங்கு இரு சில சண்டை காட்சிகளும் எடுக்க இருக்கிறார்கள்.
பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். அதோடு நடிகை மீனாவின் மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.
முக்கியமான கேரக்டர் ரோலி்ல் சத்யராஜ் நடிப்பதாக பேச்சு எழுந்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை தாணு தயாரிக்கிறார்.
படத் தலைப்பு வைக்காமலேயே இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் நிலையில் இப்போது படத்தின் தலைப்பு குறித்து புதிய செய்தி வெளியாகி உள்ளது.
“வீரன்” என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த பெயருக்கு முன் ஏதாவது வாசகம் வந்தால் நன்றாக இருக்கும் என்று விஜய் நினைப்பதால், அதற்கேற்றபடி பெயர் மாறும். அதாவது “தமிழ் வீரன்”, நம் வீரன்… இப்படி. (தவிர அஜீத் நடித்து வீரம் என்ற பெயரில் படம் வந்திருப்பதாலும் இந்த எண்ணம் தோன்றியிருக்கலாம்.)
இன்னொரு முக்கியமான விசயம்.. பெயரே தீர்மானமாக முடிவு செய்யப்படாத நிலையில் படத்தின் வெளிநாட்டு உரிமையை மட்டும் ரூ.25 கோடிக்கு மேல் விலை போயிருக்கிறதாம்!