theri-nainika1
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவிலேயே இப்படத்தின் டிரைலர் காட்சியும் தெறி டிரைலரும் வெளியிடப்பட்டது. மொத்தம் 2 நிமிடங்கள் ஓடக்கூடிய அளவில் டிரைலர் தயாரிக்கப்பட்டுள்ளது. டிரைலரை பார்க்கும்போது படத்தில் அப்பா – மகள் பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் என்பது தெரிகிறது. படத்தின் இயக்குநர் அட்லியே சொன்னதுபோல, ரொமாண்டிக் விஜய், மாஸ் விஜய் மட்டுமல்ல, அவர் குடும்பத்துக்கு மட்டுமே தெரிஞ்ச, அவருக்கு நெருங்கியவர்களுக்கு மட்டுமே தெரிஞ்ச விஜய் என்று மூன்று கெட்டப்புகளில் அசத்தி இருக்கிறார் விஜய்.
இந்த படதுதில் சமந்தா, எமி ஜாக்சன் என டபுள் ஹீரோயின், மேலும் பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குநர் மகேந்திரன், மீனா மகள் நானிகா என பலரும் நடித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
தெறி டிரைலர் லிங்க்: