தொகுதி எம்.எல்.ஏ.. அல்லது எம்.பி. தொகுதிப்பக்கமே வரவில்லை என்றால், “காணவில்லை” போஸ்டர் ஒட்டுவது வழக்கம்தான். கொஞ்ச நாட்களாக இது போன்ற போஸ்டர்கள் முளைக்காமல் இருந்தன. சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா தொகுதியில் இது போல போஸ்டர் ஒட்டப்பட.. அடுத்தாதக மழைவெள்ளத்தை நேரில் காண முதல்வர் வந்தார்.
இப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்படி போஸ்டர்கள் முளைத்திருக்கின்றன. அதுவும் தினமும் டி.வி. விவாதங்களில் வந்துகொண்டிருக்கும் விஜயதரணி எம்.எல்.ஏ.வின் விளவங்கோடு தொகுதியில்!
ஒட்டியிருப்பது த.மா.காவினர் என்றாலும் ஒட்டுமொத்த தொகுதிவாசிகளும் விஜயதரணி மீது புகார் படலம் வாசிக்கிறார்கள். “எங்க எம்.எல்.ஏ. சென்னையிலேயே முழுசா செட்டில் ஆகிட்டார். தொகுதி பக்கமே வர்றதில்லை.. ஊர் உலக பிரச்சினையை எல்லாம் டிவிக்களில் விவாதிக்கிறார். உள்ளூர் பிரச்சினைகளை கண்டுக்கிறதே இல்ல..” என்கிறார்கள்.
அப்படியா சேதி என்று, விஜயதரணி எண்ணில் தொடர்புகொண்டோம். ஒலித்துக்கொண்டே இருந்தது..
நெசமாவே காணுமோ?