anbumani
பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் திருப்பூர் மாவட்டத்தில் “உங்கள் ஊர், உங்கள் அன்புமணி’ என்ற நிகழ்ச்சிக்காக கோவைக்கு வந்திருந்தார். அங்கே அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,
“ மக்கள் நலக் கூட்டணி கட்சித் தலைவர்களிடம் கருத்து வேறுபாடு காணப்படுகிறது. தேர்தலுக்கு முன்பாக முதல்வர் வேட்பாளரை அறிவிக்க மாட்டோம் என்றனர். பின்னர் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவித்தனர்.
மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டத்தை அறிவித்தனர். பின்னர், தேமுதிக-வின் தேர்தல் அறிக்கையைதான் தங்களது அறிக்கை என்கின்றனர். தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக் கூட்டத்தில் பேசும் பிரேமலதா விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணி குறித்து பேசுவது இல்லை.
முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் பத்து நாள்களுக்கு மேலாகியும் வெளியே வராதது ஏன், மக்களைச் சந்திக்காமல் இருப்பது ஏன்?. ” என்று கூறினார்.