மெல்போர்னே:
விக்கெட் வீழ்த்தியதை ‘ஓவராக’ கொண்டாடிய இந்திய ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியாவுக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்து அபராதம் விதித்துள்ளது.
அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20:20 கிரிக்கெட் போட்டியின் 16வது ஓவரில் பேட்ஸ்மேன் கிரிஸ் லீனை பந்துவீச்சில் வீழ்த்திய இந்திய வீரர் பாண்டியா, அந்த வீழ்ச்சியை அதிகமாக கொண்டாடி மகிழ்ந்தார்.
அந்த கொண்டாட்டம் தீவிரமாக இருந்ததாக அந்த போட்டியின் ஐசிசி நடுவர்கள் சைமன் பிரை, ஜான் வார்டு, மூன்றாவது அம்பயர் பால் வில்சன், நான்காவது அதிகாரி ஜெரார்டு அபூட் ஆகியோர் கருதினர்.
இந்த போட்டியில் 37 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது. ஐசிசி நன்னடத்தை விதியை பாண்டியா மீறியதாக நடுவர்கள் கண்டித்தனர். இதை பாண்டியா ஏற்றுக் கொண்டார். முதல் முறை என்பதால், அவருக்கு குறைந்தபட்ச அபராதமாக போட்டியின் சம்பளத்தில் இருந்து 50 சதவீத தொகை செலுத்த நடுவர்கள் உத்தரவிட்டனர்.