சென்
னை:
முதல்வர் ஜெயலலிதாவின் உன் பிறவா சகோதரியான சசிகலாவின் பிறந்த நாளான இன்று, அவரை வாழ்த்தி அதிமுகவினர் சிலர் போஸ்டர் ஒட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுவரை, வெளிப்படையான அரசியலில் ஈடுபடாமல் இருந்த சசிகலா, வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று ஒரு யூகச் செய்தி உலவுகிறது. ஏற்கெனவே ஜெயலலிதா போட்டியிட்ட ஸ்ரீரங்கம், மற்றும் தஞ்சாவூர், மன்னார்குடி ஆகிய தொகுதிகளுள் ஒன்றில் சசிகலா போட்டியிடுவார் என்றும் பேச்சு அடிபடுகிறது.
அவரது பிறந்த நாளுக்காக ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள், இந்த யூகச் செய்திக்கு வலு சேர்க்கும்படியாக இருக்கிறது.
Patrikai.com official YouTube Channel