சென்னை: வடக்கு வங்கக்கடலில் உருவாகி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது உள்ளது என  இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்து ள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் அவ்வபோது மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான நீலகிரி உள்பட மலைப்பாங்கான பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில்,  மத்திய மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி  உருவாகி இருப்பதாக வானி ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால்,  தமிழகத்தின்  சில மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என கூறியிருந்தது.

இந்த நிலையில், . திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 24-ந்தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் மத்திய மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி  வலுவடைந்து உள்ளதாகவும்,   இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவுக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  தொடர்ந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை ஒடிசா கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரியில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.