வடகொரியாவில் உள்ள கப்பல்களில் நூற்றுக்கணக்கில் அழுகிய நிலையில் உடல்கள் கிடப்பதை ஜப்பான் கடற்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வடகொரியா கடற்கரையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள 15 கப்பல்களில் நூற்றுக் கணக்கில் உடல்கள் கிடக்கின்றன. இது மீனவர்களின் உடலாக இருக்கும் என ஜப்பான் தெரிவித்துள்ளது.
கிம் ஜாங் தனது ஆட்சிகாலத்தில் மீன் பிடித் தொழிலை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக ராணுவத்தை கிம் ஜாங் பயன்படுத்திவருகிறார்.
இதுபோன்று பணிக்கு அனுப்பப்படுவர்களுக்கு போதுமான அளவுக்கு பயிற்சி இல்லாத காரணத்தால் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. காலநிலை மாற்றத்தின் காரணமாக கூட விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருத்துக்கள் எழுந்துள்ளது.
கிம் ஜாங்கின் ஆட்சி பிடிக்காத காரணத்தால் அங்கிருந்த தப்பித்து செல்லும்போது அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற கருத்தும் தெரிவிக்கப்படுகிறது.
இதேபோல் அதிக பிணங்களுடன் 15 கப்பல்கள் வடகொரியாவில் நிறுத்தப்பட்டுள்ளாதால் இது பேய் கப்பல்கள் என அழைக்கப்படுகிறது.