டில்லி

ணமதிப்பிழப்பு நடவடிக்கையை ரிசர்வ் வங்கி அனுமதி இன்றி நடத்தியதாக பிரதமர் மோடிக்கு பிரசாந்த் பூஷன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் வருடம்  நவம்பர் மாதம் 8 ஆம் தேதி இரவு பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார்.   அதனால் உயர்மதிப்பு நோட்டுக்களான ரூ 500 மற்றும் ரூ 1000 செல்லாததாகின.  அவற்றை மாற்ற மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர்.   அந்த சமயத்தில்  வரிசையில் நின்ற ஓரிருவர் இறந்த செய்திகளும் வந்தன.

இந்நிலையில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட ஒரு பதிலில் ”ரிசர்வ் வங்கிக்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யவும் அனுமதி அளிக்கவும் நேரம் அளிக்கப்படவில்லை.

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையிலான ரிசர்வ் வங்கி குழுவிடம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து தஆலோசனை செய்ய தகவல் அளிக்கப்பட்டது

ஆனால் அந்த தகவல் அளித்து  இரண்டரை மணி நேரத்தில் இந்த நடவடிக்கை  அறிவிக்கப்பட்டது.  அப்போது ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கவில்லை” என தெரிவிக்கபட்டது.

இது குறித்து பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தனது டிவிட்டரில், “பணமதிப்பிழபு நடவடிக்கை குறித்து ஆலோசிக்கவும் அனுமதி அளிக்கவும் ரிசர்வ் வங்கிக்கு மோடி நேரம் அளிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இந்த நடவடிக்கையை அவசரக் கோலத்தில் மோடி அறிவித்ததால் கோடிக்கணக்கானோர் பணி இழந்தனர்.

தங்களிடம் இருந்த சிறு தொகையை மாற்ற மக்களை மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வைத்து மோடி அவர்களை பழி வாங்கினார்.  தற்போது  அவர்களுக்கு பழி தீர்க்கும் நேரம் வந்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.