டில்லி
தேர்தல் பிரசாரத்துக்கு ராணுவ நடவடிகைகளை பயன்படுத்த கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தும் பாஜக உபயோகிப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

கடந்த மாதம் 14 ஆம் தேதி நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்திய போது அவர்களை விரட்டிச் சென்ற விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானியரால் சிறை பிடிக்கப்பட்டார். உலக நாடுகள் அழுத்தம் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த ராணு நடவடிக்கைகளை உத்திர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜ் நகரில் பாஜக பல சுவரொட்டியாக ஒட்டி உள்ளது. அது மட்டுமின்றி நாட்டின் பல இடங்களிலும் அபிநந்தன் புகைப்படத்துடன் பல சுவரொட்டிகளையும் பாஜக ஒட்டி உள்ளது. கடந்த வாரம் டில்லியில் நடந்த பாஜகவின் தேர்தல் பிரசார பைக் பேரணியில் டில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி ராணுவ உடையில் கலந்துக் கொண்டார்
இவை அனைத்தும் நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ராணுவ அதிகாரிகள் பலர் பாஜகவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்திய கடற்படை முன்னாள் தலைவர் எல் ராமதாஸ் நேற்று இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில் தேர்தல் ஆணையம் ராணுவ நடவடிக்கைகள், ராணுவத்தினர் புகைப்படங்கள் மற்றும் ராணுவ சீருடைகளை எந்தக் கட்சியும் பிரசாரத்துக்கு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
இது குறித்து டிவிட்டரில் பல நெட்டிசன்கள், “விங் கமாண்ட்ர் அபிநந்தனின் குடும்பத்தினர் மீடியாவின் முன்பு வராமல் இருந்த காரணம் என்ன என்பது யாருக்காவது தெரியுமா? அவர்கள் தங்களை அரசியல் காரணத்துக்காக பயன்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான்” என பதிந்து அபிநந்தனின் சுவரொட்டியையும் பதிந்துள்ளனர்.
[youtube-feed feed=1]