டில்லி
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜ்பக்சேவை ராகுல் காந்தி, மன்மோகன் சிங், சுப்ரமணிய சாமி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசி உள்ளனர்
நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சே டில்லி வந்துள்ளார். அவரை மத்திய அமைச்சர் சஞ்சய் தேத்ரே வரவேற்றார். இதற்கு முன்பு இலங்கையின் புதிய அதிபர் பதவி ஏற்ற உடன் முதல் வெளிநாட்டுப்பயணமாக இந்தியா வந்திருந்தார்.
அப்போது டில்லியில் பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசி உள்ளார்.
டில்லியில் மகிந்த ராஜபக்சே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசி உள்ளார்.
அத்துடன் பாஜக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமியும் அவரை சந்தித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சே இந்தியாவில் வாரணாசி, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். அதையொட்டி இன்று அவர் வாரணாசி சென்றுள்ளார். அவரை வாரணாசி விமான நிலையத்தில் மூத்த அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அவர் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரார்த்தனை நடத்தி உள்ளார்.