
இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா 2005–ல் சுஜன்யா என்ற பெண்ணை மணந்தார். 2007–ல் சுஜன்யா விவகாரத்து பெற்றார். 2011–ல் ஷில்பா என்ற பெண்ணை மணந்தார். அவரும் பிரிந்து விட்டார்.
2015 ஜனவரி 1–ந் தேதி ஜபருன்னிசா என்ற பெண்ணை யுவன்சங்கர் ராஜா மணந்தார். இதற்காக மதமும் மாறினார். இவர்களுடைய இல்லற வாழ்க்கை இனிதாக போகிறது. யுவன்சங்கர் ராஜா – ஜபருன்னிசா தம்பதிக்கு நேற்று தனியார் ஆஸ்பத்திரியில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
நேற்றைய தினம் யுவன் சங்கர் ராஜாவின் தாயார் மறைந்த ஜீவாவின் பிறந்த நாள். அதே நாளில் தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பது தன்னுடைய அம்மாவே வந்து பிறந்து இருப்பதாக யுவன்சங்கர் ராஜா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel