download
தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் உட்பட 10 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை இன்று ராஜினாமா செய்தனர். பதவி விலகல் கடிதத்தை பேரவைத் தலைவர் தனபாலிடம் நேரில் அளித்தனர்.
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக, 29 இடங்களில் வெற்றி பெற்றது. பிறகு , 2012-ம் ஆண்டில் ஏற்பட்ட கருத்து மோதலில் கூட்டணி முறிந்தது.
இந்நிலையில், மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ சுந்தரராஜன், திட்டக்குடி தமிழழகன், பேராவூரணி அருண்பாண்டியன், ராதாபுரம் மைக்கேல் ராயப்பன், சேந்தமங்கலம் சாந்தி, செங்கம் சுரேஷ்குமார், விருதுநகர் மாஃபா பாண்டியராஜன், திருத்தணி எம்எல்ஏ அருள் சுப்ரமணியன் ஆகியோர் அடுத் தடுத்து முதலமைச்சரை சந்தித்து அதிமுக ஆதரவாளராக மாறினர்.
தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக செயல்பட்டு வந்த 8 பேரும், தங்கள் பதவியை இன்று ராஜினாமா செய்தார்கள்.  இதே போல், அணைக்கட்டு தொகுதி பாமக எம்எல்ஏ கலையரசு, நிலக்கோட்டை தொகுதி புதிய தமிழகம்  எம்எல்ஏ ராமசாமி ஆகியோரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் பதவி விலகல் கடிதத்தை பேரவை தலைவர் தனபாலிடம் நேரில் வழங்கினர்.
தே.மு.தி.க. எம்எல்.ஏக்கள் 8 பேரின் ராஜினாமாவை தொடர்ந்து, அக்கட்சியின் பலம் பேரவையில் 20 ஆக குறைந்தது. இதனால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை விஜயகாந்த் இழப்பதாக பேரவை தலைவர் அறிவித்துள்ளார். வேறு எந்த சட்டமன்ற கட்சித் தலைவரையும் எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்க இயலாது எனவும் பேரவை தலைவர் தனபால் அறிவித்துள்ளார்.
இந்த சட்டபேரவை காலத்தில் பெரும்பாலான காலம் தலைமையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கிட்டதட்ட அ.தி.மு.கவில் ஐக்கியமாகியிருந்த இந்த எம். எல்.ஏக்கள், கட்சியைவிட்டு ராஜினாமா செய்யவில்லை. அப்படி செய்திருந்தால், கட்சி தாவல் தடை சட்டப்படி அவர்களது எம்.எல்.ஏ. பதவி பறிபோயிருக்கும்.
தன்னை கடுமையாக விமர்சித்த, அதிமுக வுக்கு ஆதரவாக செயல்பட்ட தே.மு.தி.க. எம்.எல்.ஏக்களை கட்சியை விட்டு நீக்க, அதன் தலைவர் விஜகாந்துக்கும் தைரியமில்லை  தான் நேர்மைக்காக மிகவும் ஆத்திரப்படுபவன் என்பது போல பில்அட் காட்டும் விஜயாந்த் அமைதியாகவே இருந்தார்.   காரணம்,  அதிருப்தி எம்.எல்.ஏக்களை கட்சியைவட்டு நீக்கினார்ல்,   அவர்களது பதவி பறிபோகாது. இவரது எதிர்க்கட்சி தலைவர் பதவிதான் பறிபோகும்.
இதே நிலையைத்தான் பாமக மற்றும் புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் நடந்தது.
ஆனால் சட்டப்பேரவை காலம் முடிந்து அடுத்த தேர்தல் வரும் நேரத்தில் இப்போது ராஜினாமா செய்திருக்கிறார்கள் அதுவும், அ.தி.மு.க.வில் சட்டபூர்வமாக இணைந்து, தேர்தலில் சீட்டு பெறுவதற்காக.
யாருக்கும் வெட்கமில்லை!