கோவை காந்தி புரத்தில் ‘ஹை மார்க்’ என்ற பெயரில் ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தி வந்த சண்முக சுந்தரி, சட்டப்படிப்பான எல்.எல்.பி. சான்றிதழ்களை போலியாக தயாரித்து பலருக்கு விற்றார். இதை வாங்கிய சிலர், நீதிமன்றத்தில் வழக்காட பதிவு செய்ய முயற்சித்த போது பிடிபட்டனர். இவர்களை விசாரித்தபோது, சண்முகசுந்தரிதான் மூளையாக இருந்து செயல்பட்டார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சண்முகசுந்தரியிடம் விசாரணை செய்தனர். அவருக்கு உதவியாக அருண் குமார், கணேஷ்பிரபு ஆகியோரையும் கைது செய்தனர்.
விசாரணையில் சண்முக சுந்தரி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மகளிர் அணி துணைத் தலைவராக இருப்பது தெரிந்தது. கடந்த வருடம் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இப்போது சமூகவலைதளங்களில் ஒரு படம் உலவுகிறது. பா.ம.க. நிறுவனர் ராமதாசுடன் சண்முகசுந்தரி மேடையில் அமர்ந்திருப்பது போன்ற படம் வைரலாக பரவுகிறது. அதோடு, “சான்றிதழ் மோசடியில் சிக்கிய சண்முக சுந்தரியை கட்சியிலிருந்து நீக்காதது ஏன்” என்ற வாசகமும் இருக்கிறது.