விழுப்புரம்:
தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
திமுக ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, அவரது நண்பர்கள் பேராசிரியர் மணிவண்ணன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் 2002-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதேபோல் 2012-ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி பொன்முடி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் மற்றொரு வழக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறLு.
இந்த வழக்கில் பொன்முடிக்கு எதிராக 39 பேர் சாட்சியம் அளித்துள்ளதாகவும், அது குறித்து உங்களது கருத்து என்ன என்று பொன்முடி மற்றும் விசாலாட்சியிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அது குறித்து எங்களுக்கு தெரியாது என பொன்முடியும், விசாலாட்சியும் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து இறுதி விசாரணையை வரும் 30ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
ஏப்ரல் 10ம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் வெளியாகும் இந்த ஊழல் வழக்கின் தீர்ப்பு அரசியலில் பரபரப்பை ஏற்படத்தக்கூடும் என்று சொல்லப்படுகிறது.