சென்னை:

செப்டம்பர் 9,10 தேதிகளில் நடக்கவிவருக்கும் சர்வதேச தொழிலதிபர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு பிரம்மாண்டமான முறையில் செய்துவருகிறது. இந்த நிலையில், “முதலீட்டாளர் மாநாட்டால் தமிழகத்துக்கு எந்த பயனும் கிடையாது. மக்களை ஏமாற்றுகிறார் ஜெயலலிதா” என்று எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

“சட்டபேரவை தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல்ஆதாயத்திற்காகவே உலக முதலீட்டாளர் மாநாட்டை ஜெயலலிதாஅரசு நடத்துகிறது” என்று தேமுதிக விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நோக்கியா,ஃபாக்ஸ்கான், ரெனால்டு நிஸான் போன்ற தொழிற்சாலைகள் அதிமுகஅரசின் தவறான வரிக்கொள்கையால் தமிழகத்தை விட்டுச்சென்றுவிட்டன.

11

இப்படி,  தமிழகத்தில் இயங்கிவரும் தொழிற்சாலைகளையேதக்கவைத்துக்கொள்ள  தமிழக அரசு,  மக்களை திசை திருப்பவே உலகமுதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகிறது.  இந்த மாநாடு மூலம்தமிழகத்தின் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படாது”  என்று விஜயகாந்த்தெரிவித்துள்ளார்.

அதே போல, “உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்பது தேர்தலைமனதில் வைத்து அரங்கேற்றப்பட்டுள்ள ஒரு நாடகம்” என்று திமுகபொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் எழுதியுள்ள ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

”கடந்த 2014 அக்டோபர் மாதத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி76 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கப் போகிறோம் என்றுதடபுடலாக அறிவிப்பினை வெளியிட்டது அதிமுக அரசு.  அதனால் எந்தவித பயனும் ஏற்படாத நிலையில் மீண்டும் அதே போல மாநாடு நடத்துகிறது.

22

மாநாடு நடத்துவதற்கு இதை விட மோசமான நேரம் வேறு எதுவும்இருக்க முடியாது. ஏனென்றால் இன்றைக்கு ஆஸ்திரேலியா, ஜப்பான்,தென் கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, கனடா ஆகியஅனைத்து நாடுகளிலும் பொருளாதார ரீதியாக பெரும் குழப்பம்நிலவுகிறது.

லண்டன் ஸ்டாக் எக்சேஞ்சின்  இந்த வருடத்திலேயே குறைந்தமதிப்புக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அதிகப்படியான வேலை இல்லாதிண்டாட்டமும், கச்சா எண்ணை விலை குறைவும் கனடாவின்பொருளாதாரத்தை பெரும் நெருக்கடியில் கொண்டு போய்விட்டிருக்கிறது.

சீனப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள குழப்பங்கள் நம் நாட்டில்சென்செக்ஸ் புள்ளிகள் வரலாறு காணாத வகையில் சரிந்து விடகாரணமாக அமைந்திருக்கிறது. இப்படியொரு சூழ்நிலையில் உலகமுதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, அந்த மாநாட்டிற்கு முக்கிய ஐ.டி.கம்பெனிகளை அழைத்து வர மாநில அரசு அதிகாரிகள் முயற்சிசெய்தாலும், எந்தக் கம்பெனியும் மாநாட்டிற்கு வருவதாகவோ அல்லதுபுதிய முதலீட்டு ஒப்பந்தங்களைப் போடுவதற்கு தயாராகஇருப்பதாகவோ ஆர்வம் காட்டவில்லை.

ஆகவே, உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்பது தேர்தலை மனதில்வைத்து அரங்கேற்றப்பட்டுள்ள ஒரு நாடகம்.

“ உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்பது விளம்பரத்துக்கானதுமட்டுமே; இதனால் எந்த ஒரு பயனும் இல்லை” என்று பாட்டாளி மக்கள்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.46,602 கோடி தொழில் முதலீடுசெய்யப்பட்டிருப்பதாக சட்டப் பேரவையில் தொழில்துறை அமைச்சர்தங்கமணி கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். இந்த தகவல்உண்மையாக இருந்தால் எந்தெந்த நிறுவனங்கள் எங்கெங்குஎன்னென்ன தொழிற்சாலைகளை தொடங்கியுள்ளன? அவற்றில்எத்தனை பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்துவெள்ளை அறிக்கை வெளியிடும்படி பா.ம.க. வலியுறுத்தி இருந்தது.ஆனால், இன்று வரையில் தமிழக அரசிடமிருந்து இந்த வினாவிற்குபதில் வரவில்லை. உண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்அடிப்படையில் தமிழகத்தில் செய்ய ஒப்புக் கொள்ளப்பட்ட முதலீட்டின்மதிப்பு ரூ.29,558 கோடி மட்டும் தான். இதில் கூட ரூ.10,660 கோடி மட்டுமேஇதுவரை முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த உண்மையை கடந்த 03.02.2014 அன்று தமிழக சட்டப்பேரவையில்ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதானவிவாதத்திற்கு விடையளித்துப் பேசிய முதல்- அமைச்சர் ஜெயலலிதாஒப்புக் கொண்டிருக்கிறார்.

33

அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் ரூ.42,400 கோடி முதலீடு செய்ய 16நிறுவனங்கள் ஒப்புக்கொண்டிருப்பதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதாதெரிவித்திருந்தார். ஆனால், அதன்பின் 18 மாதங்கள் ஆகி விட்டநிலையில், சூரிய ஒளி மின் திட்டத்திற்காக ரூ.4536 கோடி முதலீடுசெய்ய அதானி குழுமம் ஒப்பந்தம் கையெழுத்திட்டதைத் தவிர,இதுவரை ஒரு பைசா கூட முதலீடு வரவில்லை. அ.தி.மு.க. ஆட்சி 6மாதங்களில் முடிவுக்கு வரப் போகிறது. அதற்கு முன்பாக ஒரு லட்சம்கோடி முதலீட்டை ஈர்த்துவிட்டோம் என விளம்பரப்படுத்திக்கொள்வதற்கு மட்டும் தான் இந்த மாநாடு பயன்படுமே தவிர வேறு எந்தவகையிலும் பயனளிக்கப் போவதில்லை.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா,குஜராத், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.50,000 கோடிமுதலீடு வெளியேறியிருக்கிறது என்பதுதான் உண்மை”

-இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் கூறியிருக்கிறார்..