3

டிகர் சிம்பு, இசையமைபபாளர் அனிருத் கூட்டணியில் வெளியான பீப் பாடல் பற்றி திரைப்பட இசைமயைப்பாளர் இளையராஜாவிடம், பத்திரிகையாளர் கேட்டதற்கு ஆவேசமானார் அவர். இது சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

“இளையராஜாவின் நடத்தை தவறு” என சக இசையமைப்பாளர் ஜேம்பஸ் வசந்தன் தெரிவித்தார். இந்த நிலையில் இசையமைப்பாளர், இயக்குநர் பாடலாசிரியர் என்று பன்முகம் கொண்டவரும் இளையராஜாவின் சகோதரருமான கங்கை அமரன் இது குறித்து கருத்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

 

கங்கை அமரன் பதிவு
கங்கை அமரன் பதிவு

அதில், அவர் கூறியுள்ளதாவது:

“இளையராஜா போன்ற பெரியோரிடம் எதைக் கேட்க வேண்டும் என்ற வரம்பு வேண்டும். அவர் இசையமைத்த பாடல்களையே அவர் கேட்டு நான் பார்த்ததில்லை.

இந்த முட்டா பீப் பசங்க போட்ட பாட்ட அவர்கிட்ட கேட்டது எனக்கு புடிக்கல..

ஏன்.. ரஜினி சாரோட சொந்தக்கார பையன்தானே அனிருத்து.. ? அவர்கிட்ட போயி கேளுங்க..

ஏன், தமிழ் தமிழ்னு உசுர விட்டாரே அந்த வெங்காயத்தோட அப்பா டி.ஆர்.. அவங்க அபிப்பிராயம் என்னன்னு கேட்டு போடுங்க..

என் அன்புக்குரிய பத்திரிகை நண்பர்களே.. உண்மையாக உயர்ந்தோரை உள்ளம் கொதிக்க வைக்க வேண்டாம்” என்று தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் கங்கை அமரன்.

 

“அந்த பீப் பாடலைப்பற்றி கருத்து கூறுவதே தனது புனிதத்துக்கு கேடு என்பதைப்போல இளையராஜா பத்திரிகையாளரிடம் வெகுண்டார்.  இந்த நிலையில், டி.ஆரிடம் கேள் என்பதையாவது ஏற்றுக்கொள்ளலாம்.  ஏனென்றால், சிம்புவின் அப்பா அவர். தவிர இந்த விவகாரத்திலும் சிம்புவை காப்பாற்ற பெரு முயற்சி எடுத்துவருகிறார். ஆனால் இந்த சர்ச்சைக்கு தொடர்பில்லாத ரஜினிகாந்தை கங்கை அமரன் இதில் இழுத்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது” என்று ரஜினி ரசிகர்களிடையே வருத்தமான  பேச்சு அடிபடுகிறது.

அதே நேரம் பீப் பாடல் பற்றி சில நாட்களுக்கு முன் இவர், “பீப் பாடல் போன்ற ஆபாசமான பாடல் வரிகளை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையெனில் எதிர்காலத்தில் இது போல் பல பாடல்கள் வெளிவரும்’ என்று கோபமாக கருத்து  தெரிவித்திருந்தார்  என்பது  குறிப்பிடத்தக்கது.