
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது கூத்தியார்குண்டு அகதிகள் முகாம். இந்த முகாமை பார்வையிடச்சென்ற அதிகாரி துரைப்பாண்டியன் என்பவர், முகாமிற்குள் சோதனையிட்டிருக்கிறார். அப்போது முகாமில் இல்லாமல் தாமதமாக உள்ளே வந்த இலங்கை தமிழர் ரவி என்பவரின் பெயரை அகதிமுகாம் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளார்.
மருத்துவமனையில் பேரனை சிகிச்சைக்கு சேர்க்க சென்றதால் தாமதமாகிவிட்டதாக ரவி விளக்கம் அளித்தார். ஆனால் அதை ஏற்க அந்த அதிகாரி மறுத்துள்ளார்.
”இப்படி செய்தால் நாங்கள் எப்படி வாழ்வது” என ஆதங்கத்துடன் ரவி கேட்க… அந்த அதிகாரி, “இதோகரண்டு கம்பத்தில் ஏறி சாவு” என கிண்டலும் அலட்சியமுமாக கூறியிருக்கிறார்.
இதைகேட்டு மனம் வெறுத்த ரவி பக்கத்திலிருந்த மின்கம்பத்தில் ஏறி உயர் அழுத்த மின் கம்பியைபிடித்துவிட்டார். அடுத்த நொடியே உடல் கருகி இறந்துவிட்டார்.
அந்த கொடுமையான காட்சியின் தொடுப்பு….
(நன்றி: நியூஸ் 7 தொலைக்காட்சி)
https://www.facebook.com/video.php?v=1524386107856516
Patrikai.com official YouTube Channel