குண்டு வெடிப்புகள் நடந்த பிரஸல்ஸில் காணாமல் போன சென்னை இளைஞர் ராகவேந்திர கணேஷை காப்பாற்றித் தரும்படி, அவரது உறவினர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸல்ஸ் நகரில் உள்ள, ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் அலுவலகத்தில், கனிணி பொறியாளராக பணியாற்றி வந்தார் சென்னை இளைஞர் ராகவேந்திர கணேஷ்.
நேற்று பிரஸல்ஸில் நடந்த குண்டு வெடிப்புக்கு பின், அவர், மாயமானதாக தகவல் வெளியானது. அவரை கண்டுபிடிப்பதற்கு, பெல்ஜியத்தில் உள்ள இந்திய தூதரகம் முயற்சி எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
ராகவேந்திரன், குண்டு வெடிப்புக்கு முன், கடைசியாக, மெட்ரோ ரயிலில் இருந்து தொலைபேசியில் பேசியதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இன்று ராகவேந்திரனின் உறவினர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் சந்தித்தனர். அப்போது, ராகவேந்திரனை காப்பாற்றித்தரும்படி கோரிக்கை வைத்தனர்.
அதற்கு முதல்வர் ஜெயலிலிதா, “மத்திய அரசின் கவனத்துக்கு உடனடியாக இந்த விசயத்தைக் கொண்டு செல்கிறேன். நிச்சயமாக ராகவேந்திரன் காப்பாற்றப்படுவார்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.