கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார்

பெங்களூரு:

ர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாரதியஜனதா முன்னிலையில் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்கி உள்ளது.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. இது காங்கிரஸ் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக மாநில மின்துறை அமைச்சர் சிவக்குமார், மாநிலத்தில் காங்கிரஸ் தோல்விக்கு காங்கிரசார் இணைந்து செயல்படாததே காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பணிகளில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மிகச்சிறப்பாக செயல்பட்டார். இருந்தாலும் நாம் தோல்வி அடைந்துள்ளோம். நாம் மற்றும் கட்சியின் மாநில தலைமை சரியான முறையில் செயல்படாதல் தொகுதிகளை இழந்தோம் என்றும் என்றும் கூறி உள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு நான் யாரையும் குற்றம் சாட்டவிரும்பவில்லை. 100 தொகுதிகளுக்கும் மேல் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால், மிகவும் பரிதாபமான தோல்வியே மிஞ்சியுள்ளது.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் சிவக்குமார், தனது கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், ஏமாற்றம் அடைந்துள்ளார்.