பண்ருட்டி: கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் எண்ணற்ற மக்கள் தங்களது வீடு வாசல் இழந்து, பரிதாபகரமான நிலையில் நாட்களைக் கடத்திக்கொண்டிருக்கிறார்கள். இப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 5000 ரூபாய் நிவாரண நிதி அறிவித்தது.
ஆனால் பல இடங்களில் ஆளும்கட்சியினர், தங்களுக்கு பெரும் பகுதி பணத்தை எடுத்துக்கொண்டு மக்களுக்கு ஆயிரம் இரண்டாயிரம் மட்டும் தருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
பண்ருட்டி அருகில் பெரியகாட்டுபாளையம் என்ற கிராமத்தில் நிவாரண நிதி ஐயாயிரத்துக்கு பதலிகா ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. “அதிகாரிகளும் ஆளுங்கட்சியினரும் கூட்டணி போட்டு ஏமாற்றுகிறார்கள்” என்று மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன், தலைமையில் அக் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
அதன் பிறகு உரிய நிவாரண தொகை அனைவருக்கும் வழங்கப்பட்டது.
மழை வெள்ளத்தால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களை இப்படி ஏமாற்றுவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நிவாரணத்தொகையில் முறைகேடு நடந்ததற்கு ஆதாரமான வீடியோ.:
[KGVID width=”426″ height=”236″]http://patrikai.com/wp-content/uploads/2015/11/Damodaran-Dan-Venkatesan-fbdown.net_.mp4[/KGVID]
https://www.facebook.com/damodaran.d.venkatesan/videos/925862207466858/?pnref=story