ஜெய்ப்பூர்:  ராஜஸ்தான் மாநில முதல்வர்  அசோக் கெலாட்டுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அவரது மனைவி சுனிதாவிற்கு தொற்று உறுதியாகி உள்ளதால், தான் தனிமைப்பபடுத்திக்கொண்டுள்ளதாக கெலாட் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக டிவிட் பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கம் நாளுக்குஞ நாள் அதிகரித்து வருகிறது. இதைத் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், வைரஸ் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அவரது டிவிட் பதிவில்,

‘என்னுடைய கோவிட்-19 பரிசோதனை முடிவு வந்துள்ளது. அதில் எனக்கு தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை, நன்றாக இருக்கிறேன். கோவிட் நெறிமுறையைப் பின்பற்றி வீட்டில் என்னை நானே தனிமைப் படுத்திக்கொண்டு பணியாற்றுவேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.