சட்டமன்றத் தேர்தலில் மனித நேய மக்கள் கட்சிக்கு கப் அன்ட் சாசர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா சென்னை ராயபுரத்தில் அறிமுகப்படுத்தினார். ராமநாதபுரத்தில் நாளை முதல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு ராமநாதபுரம், ஆம்பூர், நாகை, தொண்டாமுத்தூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் உளுந்தூர்பேட்டை தொகுதியை மீண்டும் திமுகவிற்கு வழங்கிவிட்டது. உளுந்தூர்பேட்டையில் திமுக போட்டியிடுகிறது.