
ம.தி.மு.க. பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர், ‘’தமிழகத்தில் வாழ்வாதாரத்தை காக்கவும், டாஸ்மாக்கை ஒழிக்கவும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருதி நேர்மையான ஆட்சி நடத்த எங்களுக்கு வாக்களியுங்கள். வாக்காளர்களாகிய நீங்கள் தான் நீதிபதி, எஜமானார்கள். உங்களிடம் உரிமையாக கேட்கிறோம். வருகிற தேர்தலில் தே.மு.தி.க–மக்கள் நலக்கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற போகிறோம். நாளுக்கு நாள் எங்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது. நாங்கள் ஆட்சி அமைப்போம். இதன் மூலம் அரசியலில் மாற்றம் ஏற்படும்.
திருச்சியில் மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது, அரசு தேசதுரோக வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த ஆட்சியில் மது விற்றால் தேச பக்தியா?’’என்று கேள்வி எழுப்பினார்.
Patrikai.com official YouTube Channel