sa
டம் – திருப்பூர் அரசு மருத்துவமனை
நாள்,நேரம் – 14.10.2015 இரவு 11 மணி முதல் 11.30 வரை

நேற்று வீட்டுக்கு போக கொஞ்சம் அதிக நேரமாகிவிட்டது…
போற வழியில திடீர்னு ஒரு எண்ணம்…
GH -ஐ ஒரு ரவுண்ட் சுத்தி பாக்கலாமுன்னு…
உள்ளே போனேன்…

விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு…
1.தேள்கடிக்காக ஒருத்தர் வந்திருந்தார்…
2. பாட்டில் குத்தி ரத்ததில் குளித்து ஒருவர்…
3.நான்கு நாட்களாக நம்பர் 2 போகமல் ஏழு மாத
கர்பிணி பெண் போல வயிற்றை பிடித்த படி ஒருவர்…
4.மிக சீரிசாக இளம் வாலிபர் ஒருவர்…

இந்த அரை மணி நேரத்தில் வந்த
நால்வரின் உயிரிலும் விளையாடியது …..
”மது” ஒன்று தான் .

முதலாமவர் – தேள் கடித்தது தெரியாமல் புல் மப்பு
2வது ஆள்- மது கூடத்தில் அடிதடி பிரச்சனை…
3வது ஆள் – நான்கு நாட்களாக… ரம் குடித்தால் நம்பர் 2
போகும்-னு நாலு நாளா மூக்கு முட்ட குடித்திருக்கிறார்
4வது ஆள் – காலையில் மூக்கு முட்ட குடித்தவர்
இரவு பத்து மணி வரைக்கு எழுந்திருக்கவே இல்லையாம்..
உடனே இங்கு வசதியில்லை கோவை மருத்துவமனைக்கு
கொண்டு செல்லும்படி மருத்துவர் சொல்லிவிட்டார்.
என் கணிப்புபடி இந்த நேரத்தில் சங்கு ஊதியிருக்கலாம்..

அங்கு இருந்த அனுபவசாலி ஊழியரிடம் பேச்சு கொடுத்தேன்.
தினமும் மாலையில் இது போல முப்பதுக்கும் மேற்பட்டோர்
வருகிறாகள்…. எல்லாத்துக்கும் ஒரே காரணம் மது தான்
என மரத்து போன குரலில் வெம்பினார்….

மதுவால் வருமானம் ஈட்டி ….
மனித உயிரோடு விளையாடும் அரசே … மது விலக்கை அமுல்படுத்தி கொஞ்சமாவது
கருணை வை…. பாமர மக்கள் மீது….

இல்லையென்றால் ….. மதுவால் சம்பாதித்து
டிவி,மிக்ஸி ,கிரைண்டர், மின்விசிறி,லேப்டப் போன்ற
பிச்சைகள் வேண்டாம்… சம்பாதிக்கும் குடும்ப தலைவனை
காப்பாற்ற அனைத்து வசதிகளுடன் கூடிய
நவீன மருத்துவமனையாவது
அனைத்து தாலுக்காகளிலும் தா….

sara  Saravana Prakash  https://www.facebook.com/saravanaprakash12?fref=nf