
இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தேமுதிகவுடன் மக்கள் நலக்கூட்டணி இணைந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,
’’மக்கள் நல கூட்டணியுடன் தே.மு.தி.க. சேர்ந்து இருப்பதால் வெற்றி வாய்ப்பு அதிகரித்து உள்ளது.
மக்கள் நல கூட்டணி குறைந்த இடங்களில் 110 இடங்களில் தான் போட்டியிடுவதால் எங்களுக்கு கவலையில்லை. பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம். பா.ஜனதா, காங்கிரஸ், தமிழ்நாட்டில் தி.மு.க.–அ.தி.மு.க., ஆகியோரை அகற்ற நாங்கள் கூட்டணி சேர்ந்து உள்ளோம். எங்கள் கூட்டணி சமூக மாற்றத்தை கொடுக்கும் மாற்று கூட்டணியாக இருக்கும். எங்களது கூட்டணியில் த.மா.கா.வும் சேர வேண்டும் என விரும்புகிறோம்’’என்று கூறினார்.
Patrikai.com official YouTube Channel