vaiko-thiruma
மக்கள் நலக்கூட்டணி அதிமுகவுக்கு சாதகமாக செயல்படுகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதுகுறித்து அக்கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான தொல்.திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர், ’’மக்கள் நலக்கூட்டணி அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக விமர்சனங்கள் வருகின்றன. நாங்கள் அ.தி.மு.க.வையும் அதன் தலைமையையும் எதிர்த்து தான் பேசுகிறோம்.
அ.தி.மு.க.வுக்கு சாதகமாக செயல்பட்டால் எங்கள் அணியில் எப்படி விஜயகாந்த் சேருவார். இதில் இருந்தே அது பொய்யான குற்றச்சாட்டுகள் என தெளிவாகிறது.
மக்களுக்காக உருவாக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி வெற்றிக்கு தான் பாடுபடுகிறோம். வேறு எந்த அணி வெற்றிக்கும் பாடுபடாது’’என்று கூறியுள்ளார்.

[youtube-feed feed=1]