மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக அணி இணைந்ததும், தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வைகோ, ‘’இனிமேல் இந்த அணி கேப்டன் விஜயகாந்த் அணி’’ என்று அறிவித்தார். இதையடுத்து திருமாவளவனும் அதையே அறிவித்தார். ஆனால், அது குறித்து விஜயகாந்த் எதுவும் பேசவில்லை. சிபிஐ இரா.முத்தரசனும், சிபிஎம் ஜி.ராமகிருஷ்ணனும் இது குறித்து அப்போதும் சரி அதற்கும் பிறகும் சரி பேசவில்லை.
இந்நிலையில், இன்று கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவிடம், ம.ந.கூ. – தேமுதிக அணி கேப்டன் விஜயகாந்த் அணியா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ’’மக்கள் நலக்கூட்டணி – தேமுதிக அணி இணைந்ததை ‘கேப்டன் விஜயகாந்த் அணி’ என்று அவரும் ( விஜயகாந்த்) கூறவில்லை. நாங்களும் ( சிபிஐ – சிபிஎம்) கூறவில்லை’’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
நல்லக்கண்ணுவின் இந்த கருத்து தொண்டர்களையும் மக்களையும் குழப்பமடைய வைத்துள்ளது. ஒரே அணியில் இருக்கும் தலைவர்கள் ஆளுக்கொரு கருத்தை சொல்வதுதான் இந்த குழப்பத்திற்கு காரணம்.